Technoglitch
Core Member
பிரிட்டனில் 'புலி' செய்த புதிய சாதனை
#AyngaranNetherlands ,October 10 2015
இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி ரிலீஸ் ஆகி, ஊடகங்கள் மற்றும் சமூக இணையதளங்களின் கலவையான விமர்சனங்களையும் தாண்டி திரையரங்குகளில் பெரும்பாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் 'புலி' படம் பிரிட்டனில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதாகவும், முதல் வாரத்தில் இந்த படம் ரூ.1.65 கோடி வசூல் செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த தொகை பிரிட்டனில் ஒரு தமிழ்ப்படம் செய்த மிகப்பெரிய வசூல் என்றும் கூறப்படுகிறது. இரண்டாவது வாரத்திலும் பிரிட்டனில் குடும்பத்தோடு வந்து இந்த படத்தை பார்க்கும் கூட்டம் அதிகமாகியுள்ளதாகவும், இதனால் இந்த வாரத்தின் வசூலும் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் பிரிட்டன் விநியோகிஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்
'புலி' படம் திரையிடப்பட்ட தமிழக திரையரங்குகளிலும் குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் அமோக ஆதரவு காரணமாக நல்ல வசூல் கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.