செங்கல்பட்டில் நிறைய திரையரங்குகளில் படங்கள் திரையிட்டு இருக்கிறோம். மாயாஜால், ஐநாக்ஸ் விருகம்பாக்கம், ஏஜிஎஸ், எஸ் 2, கணபதிராம், பொன்னேரி வெற்றிவேல், வேளச்சேரி லக்ஸ், வேளச்சேரி பிவிஆர் ஆகிய திரையரங்குகளில் திரையிட்டு இருக்கிறோம்.
மற்ற திரையரங்குகளில் ரஜினி, விஜய் படங்கள் என்றாலே சிலர் சூழ்ச்சி செய்து லாபம் அடைய முயற்சி செய்கிறார்கள். சில திரையரங்க உரிமையாளர்கள் நாங்கள் பணம் தர மாட்டோம், படத்தை ஓட்டி பணம் தருகிறோம் என்கிறார்கள். 100 கோடி படம் எடுத்திருக்கிறோம், ஆனால் டெபாசிட், அட்வான்ஸ் என எந்த தொகையுமே தரமாட்டோம் என்கிறார்கள். இப்படிச் சொன்னால் படம் யார் கொடுப்பார்கள்?" என்று மிகவும் கோபமாக தெரிவித்தார் தாணு.
இது தொடர்பாக திரையரங்க உரிமையாளர்களிடம் கேட்ட போது, '' தமிழக அரசு டிக்கெட் விலையை அதிகமாக விற்பனை செய்தால் புகார் அளிக்குமாறு ஒரு எண்ணை அறிவித்தது. இதனால் தாணுவிடம் படத்தின் விலையைக் குறைக்குமாறு பேச்சுவார்த்தை நடத்தினோம்.
ஆனால், தயாரிப்பாளர் தாணு படத்தின் தயாரிப்பு செலவு அதிகம் என்பதால்

படத்தின் விலையைக் குறைக்க முடியாது என்று கூறிவிட்டார்.

அவர் கேட்ட தொகை அதிகப்படியாக இருந்ததால்

எங்களால் படத்தை வாங்க முடியவில்லை என்றனர்.
