oh, is that worse compared to those?
Just see the below quotes that is 100 % right, i love Action Masala and don't expect any logic behind that,but Vedalam is too much BRO ,
nammalai paartha avvalavu kenaipayan mathiriya theriyuthu.
வேதாளம் படத்தின் தவறுகள் :
1. தம்பி ராமய்யா அவரோட மனைவி கண்ணு தெரியாம செத்துருவாங்க.. லக்ஷ்மி கோமா க்கு போய் எல்லாதையும் மறந்து போயிடுவா. அப்பறம் எப்புடி வில்லன் யாருன்னு அஜித் கண்டு புடிச்சார் ??
2. வில்லன் அஜித் இருக்க இடத்த கண்டுபிடிக்க computers, technical assistance, connectivities எல்லாம் வெச்சு கண்டுபுடிப்பான் சரி. அஜித் எப்படி பட்டன் போன் வெச்சு வில்லன் இருக்க பில்டிங்க கண்டுப்புடிச்சார்??
3. இண்டர்வல் சண்டை காட்சி நடக்குற இடம் ஸ்ருதி இருக்க இடத்துல இருந்து ரொம்ப தூரம் இருக்கும் அஜித்தை அவ follow பண்ணவும் மாட்டா அப்பறம் எப்படி கரக்டா அந்த பில்டிங்கோட 15வது மாடிக்கு வந்தா??
4. ப்ளாஷ்பேக்ல அஜித் காப்பாத்துன அந்த 99 பொண்ணுங்களுக்கு எப்படி அவராேட வீடு தெரியும். குடும்பத்தோட நேரா அவர் வீட்டுக்கு எப்படி போனாங்க?
5. அஜித் தான் போலிஸ்ல information காெடுத்தார்னு வில்லன் குருப்புக்கு எப்படி தெரியும்.
6. Transformation scene ku முன்னாடி அஜித் அவரோட கார் அங்கயே விட்டுட்டுப் போயிட்டார். அப்பறம் லட்சுமி மேனன் ஏன் அஐித்தை சர்ச்ல தேடல.
7. இண்டர்வல் முன்னாடி அஜித் கரண்ட் ஆஃப் பன்னுவாரு, அப்பறம் எப்படி மைக்ல பேசுனாரு.
8. க்ளைமேக்ஸ்ல வில்லன் ஆளுங்க செத்து கெடப்பாங்க. ஆனா அத லட்சுமி மேனன் பாக்கமாட்டாளாம். அவளுக்கு தெரியாம இவரு வில்லன அழிப்பாராம்.
படத்துல தப்பு இருக்கலாம், இங்க படமே தப்பா இருக்கு.
எப்பா போதும்டா, ரீல் அறுந்து போச்சு.